சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில், ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

கடந்த 2023-24 பட்ஜெட்டில்,  ₹40,299 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு  2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2023-24 பட்ஜெட்டில் : ₹6,967 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டது. இந்த  2024-25 பட்ஜெட்டில் : ₹8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு

தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு

பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.

உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கட்டட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்படும்.

6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு.

நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு.

தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு.

பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 5 மாவட்டக்ளில் இலவச வைஃபை  வசதி.

அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.b அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் ’தமிழ் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் தொடங்கப்படும்.

தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும்.

உயர்கல்வியில்‌ பெண்களின்‌ சேர்க்கையை அதிகரிக்கும்‌ நோக்கத்துடன்‌ அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம்‌ அம்மையார்‌ புதுமைப்பெண்‌ திட்டம்‌ பெண்களின்‌ உயர் கல்வியில்‌ பெரும்‌ முன்னேற்றத்தை எற்படுத்தியுள்ளது.

அதேபோல்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும்‌ அரசுப்‌ பள்ளி மாணவரின்‌ உயர் கல்வி சேர்க்கையை உயர்த்திடவும்‌   தமிழ்ப்‌ புதல்வன் எனும்‌ ஒரு மாபெரும்‌ திட்டம்‌ வரும்‌ நிதியாண்டில்‌ இருந்து அறிமுகப்படுத்தப்படும்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌, 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்று உயர்கல்வி சேரும்‌ மாணவர்கள்‌ பாடப்‌ புத்தகங்கள்‌, பொது அறிவு நூல்கள்‌ மற்றும்‌ இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும்‌ வகையில்‌, மாதந்தோறும்‌ஆயிரம்‌ ரூபாய்‌ அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாகச்‌ செலுத்தப்படும்‌. இத்தகைய முன்னோடித்‌ திட்டங்களின்‌ மூலம்‌ நமது இளைஞர்களின்‌ ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள்‌ நமது மாநிலம்‌ மற்றும்‌ நாட்டின்‌ எதிர்காலத்‌ தூண்களாகத்‌ திகழ்வார்கள்‌. இப்புதிய திட்டத்தின்‌ மூலம்‌ சுமார்‌ மூன்று இலட்சம்‌ கல்லூரி மாணவர்கள்‌ பயனடைவர்‌. உயரிய நோக்கம்‌ கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும்‌ நிதியாண்டில்‌ 360 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்‌டுள்ளது”.

இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்