சென்னை: 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை செல்கிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்த அறிய அண்ணாமலை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் மோசமான ஆட்சியால் இலங்கை நாடே திவாலாகும் நிலையில் உள்ளது. ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகம் மற்றும்,   2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பாலும் அந்நாட்டின் முக்கிய வருமானமான சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கியில் சிக்கி உள்ளது. இதனால், ஆட்சியில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தியா சார்பில் இலங்கைக்கு ஏற்கனவே 100 கோடி டாலர் கடன் உதவி வழங்கி உள்ளது. மேலும், தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. மேலும், 760 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்களை வழங்கி உதவியுள்ளது. ஏற்கெனவே 40,000 டன் அரிசி மற்றும் பெட்ரோல், டீசல் வழங்கியும் இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இதற்கிடையில்,பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு ரூ.123 கோடிக்கு அரிசி, மருந்துகள், பால்பவுடர் அனுப்ப தயாராக உள்ள தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்க உதவும்படி, சட்டப்பேரவையில்,  தீர்மானம் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள தமிழக தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் அண்ணாமலையின் வருகை முக்கியமானது. அண்ணாமலை தனது வருகை குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் சமர்பிப்பார் என்று கூறப்படுகிறது.