சென்னை: தமிழ்நாட்டில் ரூ.92 லட்சம் மோசடி குற்றச்சாட்டிலும், 1500 கிலோ குட்கா பதுக்கிய விவகாரத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தடுத்த 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கால் பதிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி, அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறது. ஆனால், கொள்ளையர்களும், கொலைக்காரர்களான ரவுகளின் கூடாரமாக திகழும் பாஜகவினர், பாலியல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.
தற்போது, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையாவின் பேரன் என்று கூறி ஏமாற்றி மோசடி செய்து கைது செய்யப்பட்ட நாகராஜ் என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.92 லட்சம் மோடி செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி ஒருவரும் குட்கா போதைப்பொருள் பதுக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூ20 லட்சம் மதிப்புள்ள .1500 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக, கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பா4க நிர்வாகி பிரகாஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.