சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு  இஸ்லாமிய அமைப்புகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.  பல்வேறு சமுதாய மற்றும் மத ரீதியிலான அமைப்புகள், திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த,

 நாகூர் தர்கா டிரஸ்டி செய்யது யூசுப் சாஹிப் காதிரி,

அகில இந்திய சுன்னத் உல் ஜமாத் சுல்தான் கலிபா காதிரி,

சாஹிப்பர் மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஜான் செய்யது மீரான் சாஹிப் காதிரி,

நவாப் வாலாஜா பள்ளி கூட்டமைப்பு முத்தவல்லி ஹாஜா நஜ்முதீன் முகலி,

தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷனின் செய்யது முஹம்மது கலிபா சாஹிப்,

நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் செய்யது மீரான், ஹஸ்வத் நீலம் பாஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் டாக்டர் குலாப் அலிஷா முத்தவல்லி,

முஸ்லிம் சாரிட்டபிள் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் அன்வர் பாஷா  உள்பட பல்வேற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது, தமிழக  அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உடனிருந்தார்.