சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பான நடை பெற்று வருகிறது. இதையடுத்து, முதல்வர் பழனிச்சாமி, கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட பலர் வாக்குப்பதிவு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகினறது.  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.  காலை 9 மணி நேர நிலவரப்படி  13.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.
சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்களித்தார்..
கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்களித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ தனது வாக்கினை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பூ, ‘ என் தொகுதியில் 4 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. ஆனால் விரைவில் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக எப்போதும் விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என்றார்.