டெல்லி: தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் சார்பில் மேலிட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
அதன்படி தமிழக தேர்தல் பார்வையாளர்களாக அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், உத்தம குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, , திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதா அல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, தற்போது மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
