கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது! மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

Must read

டெல்லி: கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது என்றாபர்.

மேலும்,  13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமான கொரோனா நோயாளிகள் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாகவும்,   6 மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50,000க்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article