சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 2022ம் ஆண்டு மே 25ந்தேதி வெளியிட்டிருந்தார். அதன்படி,  2023ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும்,  11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2023 ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்படும். 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த வாரம் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  குறித்த அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. காலை 10மணி முதல் 10.15மணி வரை 15 நிமிடங்கள், தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த விவரம் சரிபார்ப்பு மற்றும் வினாத்தாள் வாசிக்க அளிக்கப்படுகிறது. அதையடுத்து 10.15 முதல் 1,15மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 06ந்தேதி தொடங்கி 20ந்தேதி முடிவடைகிறது.

அதுபோல, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 5ந்தேதி முடிவடைகிறது.