சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க முடியாது என உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் அரசு பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்து. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறும் நபர்கள் தமிழ் மொழியில் போதுமான அளவு அறிவை கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.