நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
வ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 60+ ஆயிரம் ரூபாயை மாநில அரசு கடன் வைக்கிறது.
உடனே ஒரு அடி கூட சொந்தமாக மனை வைத்தில்லாத ஹீரோ தன்மீதான கடனை அடைக்க நெட் கேஷோடு கலெக்டர் அலுவலகம் ஓடுகிறான்..
கலெக்டர் அலுவலக படிகளில் ஹீரோ ஏறும்போது பின்னணியில் அனல் பறக்கிறது..பூகம்பம் வெடிக்கிறது.. கடல் கொந்தளிக்கிறது..
ஹீரோவை பார்த்ததும் வெலவெலத்துப் போகிறார் கலெக்டர். இப்படி ஒரு மூளைகார தம்பியை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று கண்கலங்கும் கலெக்டரும் பணத்தை வாங்கிக் கொள்கிறார்.
கடன் இல்லா இந்தியாவின் முதல் குடிமகன் நீதான் என்று ஹீரோவை கட்டித்தழுவி பாராட்டுகிறார்.
இந்தக் காட்சி உலகம் முழுவதும் எல்லா செய்தி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அமெரிக்க அலறுகிறது ரஷ்யா கதறுகிறது.. ஏன் ஆனானப்பட்ட ஐநா சபையே அதிருகிறது.
இந்த இடத்தில் அடுத்தடுத்து டுவிஸ்ட்டுகள் ஆரம்பம்..
பயபக்தியுடன் ஹீரோவை பார்த்து கலெக்டர் சொல்கிறார், “அப்புறம் தம்பி தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் உள்ளது. இதில் தனியார் வசம் போக அரசு நிலம் முழுவதும் பொதுமக்களுக்கு சொந்தம். அதில் உங்களுக்கு, ஒரு பங்காக எத்தனையோ லட்சம் சதுர அடி வரும் அதை நீங்கள் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும்” என்கிறார்..
“இந்த உண்மையை உங்கள் வாயாலேயே நீங்க ஒத்துக்கணும்தான் நான் இங்கு செக்கோடு வந்தேங்ணா” என்று ஹீரோ நக்கலாக தலையை ஆட்டிக்கொண்டே சொல்கிறார்.
பேக்ரவுண்ட் மியூசிக்காக, வீணை, கிடார் தபேலா, வயலின் அப்புறம் சாவு மேளம் உட்பட அத்தனை இசைக்கருவிகளும் உச்சகட்டமாக ஒலிக்கின்றன.
“தம்பி உங்களுக்குரிய லட்சக்கணக்கான சதுர அடிகளைக் கொடுத்துவிடுவோம். மாநில அரசுக்கும் உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரே ஒரு செட் டிரஸ்ஸோடு உங்களை அதில் கொண்டு போய் விட்டுவிட்டு சுற்றிலும் அகழிவெட்டி முதலைகளை விட்டு விடுவோம்..
சாலை குடிநீர் என எதுவுமே உங்களுக்கு கிடைக்காது. வெளியுலக ஆட்களை தொடர்பு கொள்ளவும் முடியாது. பார்க்கவும் முடியாது.
முதலைகளை மீறி வெளியே வர முயன்றால் சுட்டுக் கொன்று விடுவோம். காற்றை மட்டுமே சுவாசித்து நீங்கள் வாழ வேண்டும்.ஓக்கேவா?”
இப்போது கலெக்டரின் பின்னணியில் அத்தனை இசைக்கருவிகளும் ஒலிக்கின்றன..