அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மெகா ஹிட் சமையல் ஷோவாக இருக்கும ‘மாஸ்டர் செஃப்’ ஷோவின் உரிமை ஃபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்த நிலையில், தமிழ் சேனலான சன் டிவி மற்றும் தெலுங்கு சேனலான ஜெமினி டிவி-யில் இந்த ஷோவை அறிமுகப்படுத்த சன் குரூப் பேச்சுவார்த்தை நடத்தியது.

தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பிரமாண்ட அறிமுகத்துடன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வரும் மாஸ்டர் செஃப் தமிழ் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜெமினி டிவி-யில் மாஸ்டர் செஃப் தெலுங்கு ஷோவை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தமன்னாவிற்கு பதில் தெலுங்கு திரைப்பட துறையில் பிரபலமாக இருக்கும் நடிகை அனசூயா பரத்வாஜ் புதிய தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் செஃப் தெலுங்கிலிருந்து தமன்னா மாற்றப்பட்டதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை.