மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக தமன்னா ஒப்பந்தம்….!

Must read

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. இந்நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ என்கிற பெயரில் நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன் இந்தி உரிமையை ஸ்டார் இந்தியா தரப்பும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழி உரிமைகளை சன் டிவி நெட்வொர்க் வாங்கியுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்த நிகழ்ச்சியின் தொகுத்து வழங்கவுள்ளனர் என்று அறிவிப்பு வெளியானது.

தற்போது தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் பிடாடி என்கிற இடத்தில் இருக்கும் படப்பிடிப்பு அரங்கில் இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 பகுதிகளாக உருவாகும் இந்த நிகழ்ச்சியில் முதல் மற்றும் கடைசிப் பகுதிகள் 90 நிமிடங்களும், மற்ற பகுதிகள் 1 மணி நேரமும் ஓடும். அடுத்த மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

 

More articles

Latest article