சென்னை

ன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. நீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதையொட்டி 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், ”இன்றைய பேச்சுவார்த்தையில் ஓய்வூதியதாரர்கள் பிரச்சினை குறித்து பேசப்பட்டது.    ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.