சிம்பு நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாநாடு’.
வெங்கட் பிரபு கதையெழுதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜெ. சூர்யா-வின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வி ஹவுஸ் கிரியேஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் அடாத மழையிலும் தமிழகம் முழுவதும் நல்ல வசூலை பார்த்து வருகிறது.
இந்த திரைப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.