சென்னை:

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன் இஸ்லாமத்தை தழுவியுள்ளார். தனது பெற்றோர் முன்னிலையில், இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெரியோர்களின் ஆசியுடன் தாய் மதத்தில் இருந்து இஸ்லாமியராக மாறி உள்ளார்.

டிஆரின் இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக உள்ளார்.  இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல  படங்களுக்கு இசை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

குறளரசனுக்கு இஸ்லாம் மதத்தின்மீது பற்று ஏற்பட்டதால், அவர் மதம் மாற விரும்பியதாகவும், அதற்கு அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவே, அவர்களி முன்னிலையில், இஸ்லாமிய மததை தழுவியுள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள  மெக்கா மசூதியில் அவர் இஸ்லாமிய முறைப்படி மதம் மாறுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குறளரசனை இஸ்லாமிய பெரியோர்கள் குரான் ஓதி மதம் மாற்றம் செய்தனர்.

இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.  நான் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவன். அதனால் குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று தெரிவித்தார்.