புதிதாக எடுக்கப்படும் வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக புதுமுக நடிகை பனிதா சந்து

Must read

யக்குனர் பாலா தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் முடிவடைந்து மார்ச்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து புதிய இய்க்குனரைக் கொண்டு மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் முடிவு செய்தார்.

இந்த நிலையில், மீண்டும் தயாரிக்கப்படும் வர்மா படத்துக்கு இன்னும் இயக்குனர் யார் என முடிவாகாத நிலையில், கதாநாயகியாக  பனிதா சந்து நடிக்கிறார்என்று தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா வெளியிட்டு உள்ளர்.

கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.பிரபல விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.  அவருக்கு ஜோடியாக வங்காள நடிகையான மேகா செளத்ரி நடிக்க இயக்குனர் பாலா படத்தை இயக்கினார்.

ஆனால்,  தயாரிப்பாளர் இயக்குநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றும், படம் சரியாக வரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,  வர்மா படம் திடீரென கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கான வர்மா படத்துக்கு இன்னும்  இயக்குநர் யார் என்பது முடிவாகத நிலையில் புதிய கதாநாயகி தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான ’அக்டோபர்’ படத்தில் அறிமுகமான   பனிதா சந்து என்பவர் துருவ் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்படத்தை இயக்க தெலுங்கு ஒரிஜினல் இயக்குநர் சந்தீப் வங்காவையே தயாரிப்பாளர் கேட்டுக்கொண்ட நிலையில் அவர் இந்திப்படம் இயக்குவதில் பிசியாக இருப்பதால் அவரிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிஷய்யா என்பவர்  தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வமான தகவலை தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை.

More articles

Latest article