சென்னை:
நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

கடந்த மே மாதம் 19ம் தேதி டி. ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் கடந்த 14-ஆம் தேதி இரவு அமெரிக்கா பயணமானார்.
இந்நிலையில், நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “எனக்காக அன்பு காட்டிய தமிழக மக்கள்.. பிரார்த்தனையின் பலன்” என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel