டமாஸ்கஸ்:

சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி  கிடைப்பதை சிரியா அரசே தடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகிறார்கள். இரு தரப்புக்கும் கடும் போர் மூண்டுள்ளது.  இந்த போர் தற்போது உச்சகட்டதை அடைந்துள்ளது.

இந்த போர் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் 1000 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் தினமும் மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. கோரியுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை இரு தரப்பும் கடைபிடிப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

முக்கியமாக தலைநகரில் இப்போதும் தரைவழி தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ உதவிகள் கொண்டு சேர்ப்பதில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மருத்துவ உதவிக்கு கூட சிரியா அரசு அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டு அனைவரும் திரும்ப அனுப்பப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.  மக்களுக்கு பொருட்கள் கிடைக்க கூடாது என்று வேன்றுமென்றே சிரிய அரசு இப்படி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் போராளிகள் தரப்பு ரகசிய சுரங்கம் அமைத்து அதன் வழியாக  அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றது. அதையும் கண்டுபிடித்த சிரிய ராணுவம் சுரங்கப்பாதைகளை அழித்துவிட்டது.

ஆகவே பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.