சென்னை:

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம், பிரதமர் மோடியின் கையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் எங்களது கூட்டணி கட்சியான தி.மு.க. போட்டியிடுகிறது. அந்தக் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கும்.  அவர் வெற்றிபெற பாடுபடும். எங்களுக்கு அ.தி.மு.க.வையோ தினகரனையோ ஆதிரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மக்கள் நலக்கூட்டணியை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

ஆர்.கே. நகரில் திமுக வேட்பாளரை தமாகா ஆதரித்தால் அதை காங்கிரஸ் கட்சி ஆட்சேபிக்காது” என்றார்.

மேலும் அவர், ” அ.திமுகவின் இரட்டை இலைசின்னம் தேர்தல் ஆணையத்திடமோ, ஓ.பன்னீர்செல்வத்திடமோ இல்லை. அது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்” இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.