சென்னை: தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார். அவருக்கு ஒய்வுபெறும் டிஜிபியான திரிபாதி பெறுப்பை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்து வரும் திரிபாதி ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ்-ஐ தமழகஅரசு நியமித்து. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சைலேந்திரபாபு இன்று தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் எளியமுறையில் பதவியேற்றுக்கொண்டார் தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியான சைலேந்திரபாபு .

அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, திரிபாதி விடைபெற்றார். அதைத்தொடர்ந்து, இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதிக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

புதிய டிஜிபியாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபுவுக்கு அதிகாரிகள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ்ன் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.

இறையன்பு; சைலேந்திர பாபு: தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்களான விவசாய பட்டதாரிகள்….