சென்னை: மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்றபிறகு, இன்று முதன்முறையாக காஞ்சிபுரம் பயணமானார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். சாலையின் இருமங்கிலும் ஆயிரக்கணக்கானோர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து ஆரவாரம் செய்தனர்.
காஞ்சிபுரம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர் அங்குள்ள அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு தனியார் கார் தொழிற்சாலையை ஆய்வு செய்யும் அவர், அங்குள்ள அதிகாரிகளுடனும் சில ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.