சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிலைத்து நின்று நிதானமாக ஆடிவந்த ரோகித் ஷர்மா, 26 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில், அவரிடமே கேட்ச் ஆகி அவுட்டானார்.
அதேசமயம், புதிய வீரர் ஷப்மன் கில் அரைசதத்தை நெருங்கி வருகிறார்.
இதனையடுத்து, தற்போது ஷப்மன் கில்லுடன் இணைந்திருப்பவர் சத்தீஷ்வர் புஜாரா. இந்திய அணி தற்போதைய நிலையில் 75 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து சற்று வலுவான நிலையில் உள்ளது. ஷப்மன் கில்லும் புஜாராவும் விரைவில் விக்கெட்டை இழந்துவிடாமல், நிலைத்து நின்று ஆடினால், இந்திய அணி வலுவான நிலையை எட்டும்.
இந்த இரண்டாம் நாள் முடியும்வரை, இந்திய அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் இருப்பது முக்கியம்.