உலக பொருளாதார மன்ற கூட்டம் ஆண்டுதோறும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான கூட்டம் ஜனவரி 15 முதல் 19 வரை நடைபெறுகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள், பொருளாதார நிபுணர்கள் என பலரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டை கவரும் வகையில் தமிழ்நாடு சார்பாகவும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

அப்போது தமிழ்நாடு அரங்கில் சர்க்கரைப் பொங்கலுடன் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

[youtube-feed feed=1]