ஐஸ்கிரீம் எதிர்பார்த்தவருக்கு ஆணுறை டெலிவரி செய்த ஸ்விக்கி

Must read

கோவையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருந்தார்.

ஆனால், அவருக்கு ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்-க்கு பதிலாக ஆணுறை டெலிவரி செய்யப்பட்டது.

ஐஸ்கிரீம் எதிர்பார்த்து காத்திருந்த பெரியசாமிக்கு ஆணுறை பாக்கட்டை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை உடனே படமெடுத்த பெரியசாமி தனது ட்விட்டர் மூலமாக ஸ்விக்கி நிறுவனத்துக்கு புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து ஸ்விக்கி நிறுவனம் அவருக்கு பணத்தை திருப்பி அளித்துள்ளது.

மேலும், ஸ்விக்கி மட்டுமன்றி இதுபோன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பல்வேறு குளறுபடிகளை செய்வதாக பலரும் தங்களது அனுபவங்களை பதிவிட்டுள்ளனர்.

 

More articles

Latest article