ண்டன்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கை  மீண்டும் தொடங்க ஸ்வீடன் அரசு முடிவு செய்துள்ளது.

விக்கிலீக்ஸ் இணைய தளம் பல பரப்பான செய்திகளை வெலியிட்டு வந்தது.   இதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே ஆவார்.  இவர் அமெரிக்க உளவுத் துறை ஆவணக்களை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார்.  அதை ஒட்டி அமெரிக்கா  இவரைப் பிடிக்க முயன்றது.   அதனால் அசாஞ்சே ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகருக்கு குடி புகுந்தார்.

அவருடைய ஸ்வீடன் நகர பயணத்தை ஏற்பாடு செய்த பெண் அசாஞ்சே தம்மை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார்.   அதை அசாஞ்சே மறுத்தார்.   இந்த சம்பவம் இருவரின் விருப்பத்துடன் நடந்ததாக தெரிவித்தார்.  இந்நிலையில் அமெரிக்கா அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்வீடன் அரசை வற்புறுத்தியது.

ஜூலியன் அசாஞ்சே லண்டன் நகரில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.   ஜூலியன் அசாஞ்சே தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதால் விதிமுறைகளின் படி வரை யாரும் உள்ளே சென்று கைது செய்ய முடியாது.     ஸ்வீடன் நாட்டு தலைமை வழக்கறிஞர் மரியானே என்பவர் இந்த வழக்கை கைவிடுவதாக அறிவித்தார்.

ஆயினும் அசாஞ்சே தூதரகத்தை விட்டு வெளியே வந்ததும் அவரை வேறு வழக்கில் கைது செய்ய பிரிட்டன் அரசாங்கம் திட்டமிட்டது  அதன்படி கைது செய்யப்பட்ட அவர் தர்போது பிரிட்டனில் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் தலைமை சட்ட துணை இயக்குனர் ஈவா மாரி பார்சன் இன்று அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்கி புதிய விசாரணையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.   இத்னால் தற்போது பிரிட்டன் அரசுக்கு ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு அனுப்புவதா அல்லது அமெரிக்காவுக்கு அனுபுவதா என குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது..