சுவாதி கொலை வழக்கு: படம் பெற்றோருக்கு திரையிட்டு காட்டப்படும்! இயக்குனர் அறிவிப்பு

சென்னை :

சுவாதி கொலை வழக்கு படம், அவரது பெற்றோருக்கு திரையிட்டு காட்டுவோம் என்றும், லாபத்தில் அவர்களுக்கு பங்கு கொடுக்கப்படும் என்றும் படத்தை இயக்கியுள்ள இயக்குனர்  ரமேஷ் செல்வன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தையே பரபரப்பாக்கிய இந்த கொலை, தற்கொலை குறித்த சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

இதற்கிடையில், சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் இயக்குநர் அன்பு செல்வன், சுவாதி கொலையை வைத்துஒரு படம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று, சுவாதியின் தந்தை சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, படம் குறித்து இயக்குனர் அன்புசெல்வன் விளக்கமளித்துள்ளார்.

அதில், “திரைப்படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. அதே போன்று ராம்குமாரை குற்றவாளியாக காட்டியும் படம் எடுக்கப்படவில்லை, சமூக நலனை மையமாக வைத்தே சுவாதி கொலை வழக்கு திரைப்படமாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும்  சுவாதி கொலை வழக்கு படத்தை அவர்களின் பெற்றோருக்கு திரையிட்டு காட்டத் தயார் என்றும்,  படம் திரையிடப்படுவதன் மூலம் வரும் லாபத்தை சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்தின ருக்குத் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.


English Summary
Swathi Murder case: we will show the movie Scenes to Swathi Parents, Director informed