15 மொழிகளில் ரஜினியின் ’2.0′ !

ஜினி நடித்துவரும் ஷங்கரின் ‘2.0’ படம் 15 மொழிகளில் தயாராகி வருவதாக லைக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ’2.o’ .

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு ஹாலிவுட் தொழில்நுட்பட கலைஞர்கள் பலர் இதில் பணியாற்றியுள்ளனர்.

சுமார் 450 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை 15 மொழிகளில் வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆமீர்கானின் தங்கல், ராஜமவுலியின் பாகுபலி படங்கள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலை அள்ளியுள்ளதால் இந்தப் படத்தையும் அப்படி வெளியிட முடிவு செய்துள்ளனர்.


English Summary
Rajini's '2.0' movie make in 15 languages!