சென்னை 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தாருக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
IMG-20160627-WA0009
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி. இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இவர்,  கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்  மர்ம நபரால் அரிவாகொலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பலரது முன்னிலையில், நடந்த இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், சூளைமேட்டில் உள்ள சுவாதி  இல்லத்ததுக்குச் சென்று சுவாதி குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறினார்.