சென்னை; கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது பிறழ்சாட்சியான சுவாமி மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆணவக்கொலையான கோகுல்ராஜ் கொலை வழக்கு  மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்கு பிறழ்சாட்சியான சுவாதி ஆஜராக உத்தரவிட்டது.

அதன்படி இன்றைய விசாரணைக்கு சுவாதி ஆஜரானார்.அவரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  , 2011-2015 வரையிலான கல்லூரி காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று பதிலளித்தார்.  கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி கூறினார்.

இதையடுத்து,  கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தி, அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்?  அதில் உள்ளது நீங்கள்தானா என கேள்வி எழுப்பினர்.  அதற்கு ஸ்வாதி அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்றும், யாரென்று சரியாக நினைவில்லையென்றும் கூறினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளின் தொடர் அழுத்தம் காரணமாக,  வீடியோவில் இருப்பது நானில்லை, யாரென்று தெரியாது என்று கூறிவந்த ஸ்வாதி,  ஒருகட்டத்தில் நீதிமன்றத்திலேயே கண்கலங்கி அழுகத் தொடங்கிவிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம் என்றும், ஆகையால் நடந்த உண்மையை கூற வேண்டும் கேட்டனர். மேலும்,  தொடர்ந்து மறுத்தால், உங்கள்  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்து விசாரணைக்கு 15 நிமிடம் இடைவேளை விட்டனர்.

மீண்டும் பகல் 1 மணிக்கு  விசாரணை தொடங்கியது. அப்போது நீதிபதிகளின் பல்வேறு கேள்விகளுக்கு   வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்த சுவாதி திடிரென மயக்கமடைந்தார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  மயக்கமடைந்த சுவாதியை உடனடியாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்ட நேரம் நின்று கேள்விகளுக்கு பதிலளித்ததால், கலைப்படைந்து மயக்கமடைந்திருக்கலாமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தன்னையே யார் என்று தெரியாது என மறுப்பு: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின்போது சுவாதி பரபரப்பு சாட்சியம்….