சுவாதி மரணம்: உண்மையான கொலைகாரனை வெளிப்படுத்துவேன்: திலீபன் பேட்டி

Must read

 
திருச்சி:
தேசிய கொடி எரித்து, அதை தனது முகநூல் பக்கத்தில் பதிய… வழக்கை சந்தித்து சிறை சென்று திரும்பிய இளைஞர் தீலிபன் மகேந்திரன். இப்போது அதே முகநூலில் அவர் சுவாதி கொலை வழக்கு பற்றி எழுதி வந்த  அதிரடி பதிவுகளால் சிறை சென்று இன்று ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம்தான், சுவாதியை கொலை செய்தவர் என்று தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து திலீபன் மகேந்திரன் எழுதி வந்தார். இதையடுத்து இவர் மீது கருப்பு முருகானந்தம் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க… திலீபன் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு இன்று ஜாமீன் கிடைத்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த திலீபன், “காவல்துறையினர் என்னை கது செய்ய சொன்ன காரணமே புதிராக இருந்தது. என்னுடைய உயிருக்கு 5 லட்சம் விலை வைத்திருந்ததாகவும், அதனால் என்னை பாதுகாக்கவே சிறையில் அடைத்ததாக அவர்கள் சொன்னார்கள். ஆனால் சிறையில் உள்ள மனநலம் பாதித்தவர்களோடு  என்னை அடைத்து வைத்தார்கள்.

(கடிகாரச்சுற்றுப்படி இடமிருந்து) திலீபன், சுவாதி, ராம்குமார், கருப்பு முருகானந்தம்
(கடிகாரச்சுற்றுப்படி இடமிருந்து) திலீபன், சுவாதி, ராம்குமார், கருப்பு முருகானந்தம்

நான் ணிந்திருந்த உடைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக அவிழ்த்து, உள்ளாடையுடன் நிறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்” என்றார்.
மேலும் அவர், “சுவாதி கொலையில் புதைந்திருக்கும் உண்மைகளை நான் முகநூல் மூலம் வெளிப்படுத்தினேன். இதனால்,  தேடப்படும் குற்றவாளி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள்.
சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளியை  கண்டிப்பாக வெளிப்படுத்துவேன்.  சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள்.
சுவாதி கொலை குறித்த  உண்மையை சொன்ன பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார்கள். அந்த பெண் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார்’’ என்று  கூறினார் திலீபன் மகேந்திரன்.
 

More articles

Latest article