மதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது

Must read

சென்னை:
தனுடன் தமக்கு தொடர்பில்லை என்று பச்சமுத்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.
மருத்துவ படிப்புக்கு சீட் தருவதாகச் சொல்லி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் போன படத்தயாரிப்பாளர் மதனுக்கும் பச்சமுத்துவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

திரைப்பட விழா ஒன்றில் பச்சமுத்துக்குப் பின்னால் மதன்
திரைப்பட விழா ஒன்றில் பச்சமுத்துக்குப் பின்னால் மதன்

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பச்சமுத்து ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “மதனுக்கும் எனக்கும் தொடர்பு  இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “மதனுக்கும் பச்சமுத்துவுக்கும் தொடர்பில்லை என்பதை ஏற்க முடியாது” என்று கூறிய நீதிபதி, பச்சமுத்துவின் கோரிக்கையை நிராகரித்தார்.
 

More articles

Latest article