உள்ளாட்சி தேர்தல்: ம.ந.கூ தனித்து போட்டி! வைகோ அறிவிப்பு!!

Must read

தூத்துக்குடி:
டைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று வைகோ அறிவித்து உள்ளார்.,
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர்  விடுதலை சிறுத்தைகள் கட்சி , மதிமுக , இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர்.
இந்த கூட்டணி அதிமுகவுக்கு மாற்று  அணி என்று  பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதனுடன் விஜயகாந்தின் தேமுதிக , வாசனின் தமாகவும் இணைந்து அரசியல் களத்தில் வலம் வந்தது.
1vaiko
ஆனாலும்,  மக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி, வைகோவின் தேர்தல் விலகல் மற்றும் விஜயகாந்தின்  கோக்குமாக்கான செயல்பாடுகளாலும் வெற்றி பெற வேண்டிய  மக்கள் நலக்கூட்டணி தோல்வியை தழுவி டெபாசிட் இழந்தது.
இதையடுத்து மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுவதாக வாசன் அறிவித்தார். பின்னர் அதை தொடர்ந்து தேமுதிகவும் தேர்தலுக்கு மட்டும்தான் கூட்டணி என்று  மக்கள் நலக்கூட்டணியில் தற்போது  இல்லை என்பதை சூசகமாக தெரிவித்தது.
இதன் காரணமாக  உள்ளாட்சி தேர்தலில் மநகூ தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.
மேலும்  சட்டமன்றத்தில் திமுக அதிமுக கட்சிகள் பணத்தை வாரி இறைத்து ஜெயித்தன. உள்ளாட்சி தேர்தலிலும் இதே போல் பணத்தை  வாரி இறைக்க உள்ளனர் என்று தெரிவித்தார்.
 
 
 

More articles

Latest article