சென்னை:

சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற பிராமணர்கள் மாநாட்டில் பேசிய  நகைச்சுவை நடிகரும், பாஜக நபருமான எஸ்.வி.சேகர், எங்கள்மீது நம்பிக்கையில்லாட்டி, செத்தவங்களை நடுரோட்ல போட்டுட்டு போங்க, அவங்களுக்கு ஏன்சடங்கு சம்பிரதாயங்களை செய்ய எங்களை கூப்பிடுறீங்க என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்பேசும்போது, பிராமணர் சமூகத்தினரை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் திகவினரின் சர்ச்சை பேச்சுக்கள் தொடரந்து, பிராமணர் சங்க கண்டனப் பொதுக்ழுகூட்டம்  சென்னை நங்கநல்லூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன், உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க நிறுவன தலைவர் கே.சிவநாராயணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பலரும் பேசிய நிலையில்,  எஸ்.வி.சேகரின் பேச்சு ஹைலைட்டாக அமைந்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது,

பிராமணர்களை தொடர்ந்து பழித்து கூறி வரும் திமுக மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்த  ஆர்எஸ் பாரதியை கண்டிக்கிறோம்.. இதோ இங்கே இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும்,ஒன்னே ஒன்னு ஞாபகம் வெச்சுக்குங் ஒன்னே ஞாபகம் வெச்சுக்குங்க.. ஆர்எஸ் பாரதி வீட்டிலேயோ, அல்லது பிராமணர்களை எதிர்த்து பேசுவர்கள் வீட்டிலேயோ நல்லது கெட்டது நடந்தால் கலந்துகொள்ள மாட்டோம்,  எந்த பிராமணனும் பெண் எடுக்க மாட்டோம்-ன்னு சொல்லுங்க என்று கூறியவர்.

நமக்கு எதிராக பேசுபவர்கள்,  அவங்க வீட்டில யாராவது செத்துட்டா மட்டும், பிராமணரைக் கூப்பிட்டு,   நல்லா மந்திரம் சொல்லுன்னு சொல்றே? ஏன்?  என்று கேள்வி எழுப்பியவர், உனக்குதான் நம்பிக்கை கிடையாதே.. செந்தவங்களை  இழுத்து ரோட்டுல போட்டுட வேண்டியதுதானே? கார்ப்பரேஷன் தூக்கிட்டு போகட்டும்.. … அப்போமட்டும் மட்டும் நம்பிக்கை இருக்கு.. ஆனால்,  அடுத்தவன் நம்பிக்கையை குலைக்கிறே? இது எவ்வளவு அயோக்கியத்தனமானது? மறந்துடாதீங்க… என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசியவபர், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போனால், கும்பத்தை தூக்கிட்டு ஓடாதீங்க..  என்று தெரிவத்தவர்…ஒரு அதிகாரத்தில் இருக்கிறவங்களுக்கு செய்யாதீங்க..  அது கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடிய முடவன் வந்தால், அவனுக்குகூட போய் பண்ணுங்க…..

இன்னைக்கும் இந்து கோயில் மட்டும் அரசாங்கம் கையில் இருக்கு.. இவங்களால சர்ச் மேல கை வைக்க முடியல.. மசூதி மேல கை வைக்க முடியல.. அடுத்த முயற்சியாக கோயில்களை அவரவரே, அந்தந்த மதத்தினரே நடத்த வேண்டும்.. அதையும் கொண்டு வரணும்.. நல்லது நடக்கும்.. நல்லது நடக்கணும்னு நினைக்கிறவங்களை ஆதரிக்கணும்……

எனக்கும் வயது 70 தான், ரஜினிக்கும் 70தான்.. ரஜினியை விட 14 நாள் சின்னவன், ஆனால் ஒன்று, தமிழ்நாட்டை பொறுத்தவரை, நல்லது நினைக்கிறவங்களுக்கு நம்ம ஆதரவை தருவோம்.. மோடியை திட்டிறாங்களே அவங்களுக்கு நான் சொல்றேன், 2024-லயும் மோடிதான் இந்தியாவின் பிரதமர்..    அதுக்கு அப்புறம்? நீங்க இருக்க மாட்டீங்க அவ்வளவுதான்..  ஆனால்….  அவர் இருப்பார்!

. நாம சின்ன வயசுல ஸ்கூல்ல எல்லாருடைய டிபன் பாக்ஸ்-களில் கையை விட்டு சாப்பிடலையா? இப்போ எங்க இருந்து வந்தது இந்த ஜாதி வெறி? நமக்கு வெறி இல்லையே? ஏன் மத்தவங்களுக்கு மட்டும் நம்ம மேல வருது?  அப்படி வந்தால், வெறிப்பிடித்த நாய்களை கார்ப்பரேஷன்களுக்கு போன் பண்ணி புடிச்சிட்டு போக சொல்லணும்.. கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணுங்க..

ஒன்னு மறந்துடாதீங்க, எந்த எலெக்‌ஷனா இருந்தாலும் சரி, வார்டு எலக்‌ஷனா இருந்தால் கூட, திமுகவோ, திராவிடர் கழகமோ, கடவுள் எதிர்ப்பாளர்களோ யாரோ, அவங்களுக்கு ஓட்டு போடாதீங்க.. அதுதான்.. இந்த சத்தியத்தை மட்டும் மறந்துடாதீங்க..

நாம எந்த சங்கத்திலயும் உறுப்பினராகிதான் நான் இந்த சாதியை சார்ந்தவன்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.. நமக்கு பர்த் சர்ட்டிபிகேட் இருக்கு.. அப்பா, தாத்தாவுக்கு இருக்கு.. நாம எந்த சங்கத்திலயும் சேர வேண்டியது இல்லை.. எந்த பிராமணனும் சங்கத்துக்கு கட்டுப்பட்டு செய்றவன் இல்லை.. எல்லாருக்கும் சுய அறிவு உண்டு.. நாம எல்லாரும் அறிவாளிகள்.. அதுதான் நம்ம பிரச்சனையே!

நாம் அரசியல் அமைப்பு சட்டப்படி வாழ்பவர்கள்தான் பிராமணர்கள்.. நாம கள்ள நோட்டு அடிக்கல.. எந்த தப்பும் பண்ணல.. 2ஜி-ல யாரும் மாட்டிக்கல.. வீட்டுல இருக்கிற நாய்க்கு மொதல்ல சோறு போட்டுட்டுதான் அப்பறம் ஆர்எஸ் பாரதிக்கு போடறாங்களாம்.. இவர் போய் ஒரு பிராமணரை நாய்-ன்னு சொல்லலாமா?” என்றவர்,  நமக்கு பிடிக்காத டிவிக்களை புறக்கணிப்போம்.. பத்திரிகைகளை புறக்கணிப்போம்.

இவ்வாறு எஸ்வி. சேகர் பேசினார்.