சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணித்தவன்’.

இந்த திரைப்படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கிறார்.

2022 பிப்ரவரி மாதம் 4 ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு முன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனாவுக்குப் பின் தான் தயாரித்த படங்களை ஓ.டி.டி. யில் வெளியிட்டு விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நடிகர் சூர்யா.

தற்போது, ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை சீண்டியதாக பாமக-வின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார், பாமக-வினரும் சூர்யாவின் படம் எந்த தியேட்டரிலும் ஓடாது என்று குஸ்தியில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை வெளியிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பாண்டிராஜ் “நமக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

[youtube-feed feed=1]