டான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து அசோக் என்பவர் இயக்கத்தில் சிங்கப்பாதை என்ற படத்திலும், தெலுங்குப்பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அனுதீப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 25 கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்த இரு மொழிப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படத்துக்கு இசை தமன். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.