
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுஷாந்த் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மும்பையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான பிஹார் மாநிலத்தின் பாட்னாவுக்கு அஸ்தி கொண்டுவரப்பட்டது.
பாட்னாவில், திகாகாட் என்ற இடத்தின் வழியாக ஓடும் கங்கை நதியில் சுஷாந்தின் அஸ்தியை சுஷாந்தின் தந்தை, இரண்டு சகோதரிகள் ஆகியோர் வேத பண்டிதர்கள் முன்னிலையில் படகில் சென்று கரைத்தனர்.
இதே இடத்தில்தான் அவரது அம்மாவின் அஸ்தியும் கரைக்கப்பட்டது என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel