மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் சூர்யபுத்ர மஹாவீர் கர்ணா. இந்தப் படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது.

இந்தப் படத்தை பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

முன்னதாக இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் டைட்டில் லோகோ குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு படம் கைவிடப்படவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.