சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு சூரரைப் போற்று என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட இப்படம் சூர்யாவின் 38வது படமாக உருவாகிறது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “சூரரைப் போற்று” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய விமானத்தின் அடியில் வேட்டி சட்டையில் சூர்யா நிற்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.