திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ்(46) 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் :-

ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.