சூர்யா அளித்த பரிசால் ’என்.ஜி.கே.’ படக்குழுவினர் நெகிழ்ச்சி!

Must read

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் என்.ஜி.கே. படக்குழுவினருக்கு தங்க காசை பரிசாக அளித்து சூர்யா நெகிழ வைத்திருக்கிறார்.

Suriya

செல்வராகவன் நடிப்பில் சூர்யா, ராகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலரும் நடிக்கும் திரைப்படம் என்.ஜி.கே. இதன் படப்பிடிப்பு ஜனவரி 12ம் தேதியுடன் நிறைவடைந்த்து. இதனை தொடர்ந்து படத்தின் இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர்கள் குழு, ஒளிப்பதிவாளர்கள் குழு, கலை இயக்குநர்கள் குழு என அனைவருக்கும் ஒரு பவுன் தங்க காசை பரிசாக சூர்யா அளித்துள்ளார். படப்பிடிப்பின் இறுதி நாளில் சூர்யா அளித்த பரிசால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்,” சூர்யா உடனான பயணம் சிறந்ததாக இருந்தது. அவருடைய திறமை ஈடுபாடு கண்டு வியந்து விட்டேன். ‘என்.ஜி.கே’ படக்குழு அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சூர்யா “ திரைக்கும் முன்னும், திரைக்குப் பின்னும் என்னை புதிய உயரத்துக்கு நகர்த்தியதற்கு நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More articles

Latest article