சூர்யா – பிரியங்கா மோகன் ஜோடி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் சென்சார் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது.

டி. இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து ‘உள்ளம் உருகுதைய்யா’ என்ற பாடல் மட்டுமன்றி சிவகார்த்திகேயன் எழுதிய ‘சும்மா சுர்ருன்னு’ பாடலும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.

வீரமே வாகை சூடும், டான், வலிமை, பீஸ்ட், ஆர்.ஆர்.ஆர்., கேஜிஎஃப் 2 என்று பெரிய பட்ஜெட் படங்கள் பலவும் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

[youtube-feed feed=1]