கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கலுக்கு எந்த பெரிய பட்ஜெட் படமும் எதுவும் வெளியாகாததால் வியாபாரத்தில் பெரும் சரிவை சந்தித்தது சினிமா துறை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் மார்ச் 25 ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் இம்மாதம் 4 ம் தேதி ரிலீசாகும் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அன்றே அறிவித்தனர்.

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர். வெளியாகும் தேதி குறித்து இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வரிசையாக திரைக்கு வர காத்திருக்கும் படங்கள் குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது.

வீரமே வாகை சூடும் – பிப். 4
கடைசி விவசாயி – பிப். 11
எப்.ஐ.ஆர். – பிப். 11
வலிமை – பிப். 24
எதற்கும் துணிந்தவன் – மார்ச் 11
டான் – மார்ச் 25
ஆர்.ஆர்.ஆர். – மார்ச் 25
பீஸ்ட் – ஏப்ரல் 14
கேஜிஎப்-2 – ஏப்ரல் 14