சென்னை:
காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக மைக்ரோவாஸ்குரல் டிகம்ப்ரஷன் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 50க்கும் குறைவான அறுவை சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. டின்னிடஸ் என்பது மிகவும் வித்தியாசமான நோய். இது பாதித்தவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு காதிலும் ஏதோ ஒரு வலி கேட்டுக் கொண்டே இருக்கும். 2019ஆம் ஆண்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞருக்கு தற்போது அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவரது செவித்திறன் நரம்பைத் தமனி ரத்த நாளம் தூண்டுவதால் இந்த பிரச்னை ஏற்பட்டது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

உலக மருத்துவ வரலாற்றில் இதுவரை 50க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இந்தநோய் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.