‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது .

இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களைச் சிம்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகின.

சிம்புவின் இந்த நடவடிக்கையால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்கள். சிலர் சமூக வலைதளங்களில், ”இனி எங்களுக்கு நீங்க வேண்டாம், உங்களால் நாங்கள் அசிங்கப்பட்டது போதும்” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘மாநாடு’ படம் நின்றதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் காரணம், என்று சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேட்டியளித்த வருகிறார்.

”சிம்பு ‘மாநாடு’ படத்திற்காக கொடுத்த தேதியில் சுரேஷ் காமாட்சியால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. காரணம் அவருக்கு பைனான்ஸ் பிரச்சினை. இதனால் சிம்பு காத்திருந்தார். சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல, ‘மிக மிக அவசரம்’ என்ற ஒரு படத்தை தயாரித்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பவரை, தூக்கிவிட வேண்டும் என்பதற்காக தான் சிம்பு அவருக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.