ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டி, பெங்காலி என்று பல்வேறு மொழிகளில் சிறந்த படங்கள், நடிகர், நடிகர்கள், இயக்குனர்கள் என்று தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான 66ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது அந்தாதூன் படத்திற்காக ஆயுஷ்மான் குர்ராவுக்கும், உரி தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்திற்காக விக்கி கௌசலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் மராட்டிய மொழிப்படம் பானி (Paani) சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான கருத்து படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அக்‌ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வந்த பேட்மேன் படம் சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தியதற்காக சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரது நடிப்பில் வந்த பத்மாவத் படத்தின் சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.