டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை, ஆக்சிஜன் வசதி கிடைக்கவில்லை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடு பவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது‘ என மத்திய, மாநில அரசுகளுக்கும், காவல்துறையினருக்கும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன் என கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்,
ஆக்ஸிஜன், படுக்கைகள் அல்லது மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து இடுகையிடும் எவருக்கும் எதிராக வதந்தியை பரப்புவதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அனைத்து மாநிலங்கள், மையம் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளது.
மேலும். “குடிமக்கள் துன்பத்தில் உள்ளனர், நீங்கள் அவர்கள் மீது மேலும் ஆணியடித்தால், நாங்கள் காவல்துறைமீது நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளது.