டில்லி:

கோவையைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளியின் தூக்குத்தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது.

கோவையை சேர்ந்த தொழிலதிபரின் ஒருவரின் 11 வயது மகள் முஸ்கான், 8 வயது மகன் ரித்திக் ஆகியோர் டந்த 2010ம் ஆண்டு  கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்து உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் பெரும் தமிழகத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட, ஒருவனுக்கு  வழக்கில், கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட மகிளா நிதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி   தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றமும் தூக்குத்தண்டனயை உறுதி செய்து, மேல்முறையீடு மனுவை  தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.