நெல்லை: பொன்முடி மீதான 3ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், மீண்டும் பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்து சட்டப்பேரவைத் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது பதவிகள் பறிபோனது.  இந்த நிலையில், பொன்முடியின் மேல்முறையீடு மனுமீதான விசாணையில் உச்சநீதிமன்றம், பொன்முடியின் சிறை தண்டனையை சஸ்பெண்டு செய்துள்ளது. அதாவது இடைநிறுத்தம் மட்டுமே செய்துள்ளது.  வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அவரது சிறை தண்டனை ரத்து செய்யப்படுமா என்பது தெரிய வரும்.

இந்த நிலையில், இன்று   செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தண்டனையை தடை செய்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கினால் அவர்கள் பதவி நீடிக்க அனுமதி மறுக்கப்படும். அதனடிப்படையில் அவர் எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியாது என நான் உத்தரவிட்டேன். ஆனால்,  தற்போது உச்ச நீதிமன்றம் தண்டனையை தடை செய்துள்ளதால் ஏற்கனவே ராகுல் காந்தி, அன்சாரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் பொன்முடி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்முடி வழக்கில், தீர்ப்பு நகல் வந்ததுடன், இதுகுறித்து ஆலோசனை செய்யப்படும் என்றவர், . இதுதொடர்பாக  முதன்மைச் செயலாளரிடம்  அறிவுறுத்தி உள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விரைவில் அது குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயா்நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை இடைநிறுத்தம் செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…