இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.,) முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என நீதிபதி லோதா பரிந்துரைத்தார். இதனால், பி.சி.சி.ஐ.யில் சீரமைப்பு தேவை என தீர்ப்பு வழங்கினார். ஆனால், அதை அமல்படுத்த இன்னும் பி.சி.சி.ஐ. முன்வரவில்லை. நீதிபதி லோதா கூறியதை அமல்படுத்த sc-bcci-1வேண்டும் என்ற சுப்ரீம் கோர்டின் உத்தரவை, கடந்த அக்டோபர் -7 முதல் 17 வரை தசரா விடுமுறையால், பி.சி.சி.ஐ. தப்பியிருந்தது.

நேற்று மீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்டில் விசாரணை செய்யப்பட்டது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது, பி.சி.சி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், நீதிபதி லோதாவின் ஆலோசனைகளை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுவதால், அதை அமல்படுத்த கால அவகாசம் வழங்கும் படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், எவ்வளவு நாள் தேவை என்ற நீதிபதியின் கேள்விக்கு சரியான பதில் அளிக்காமல், வாய்தா வாங்கி தற்காலிகமாக தப்பியுள்ளது பி.சி.சி.ஐ.