டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை காரணமாக, அந்த பகுதி மக்கள் புற்றுநோய் உள்பட பல நோய்களால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன், அநத் பகுதி நிலத்தடி நீர்மட்டமும் மாசமடைந்தது. இதையடுத்து ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய சூட்டில், 13 அப்பாவிகள் கொல்லப் பட்டனர். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.
தமிழகஅரசின் அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற்ம, தமிழகஅரசின் அரசாணையை ஏற்று, ஆலையை நிரந்தரமாக மூட அதிரடி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பைஎதிர்த்து, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு தடை விதிக்க கோரி வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்தது.